/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோமங்கலம் அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
/
சோமங்கலம் அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
சோமங்கலம் அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
சோமங்கலம் அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
ADDED : டிச 09, 2025 04:52 AM
குன்றத்துார்: சோமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில், 'மினி ஸ்டேடியம்' அமைப்பதற்கான கட்டுமான பணியை, காங்., - எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மைதானத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில், 'மினி ஸ்டேடியம்' அமைக்க, தமிழக அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இங்கு, 400 மீட்டர் ஓடு தளம், அலுவலகம், கேலரி, கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ கோ, கால்பந்து ஆடுகளங்கள், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன.