/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
/
வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
ADDED : டிச 09, 2025 04:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13ம் தேதி, பொது வினியோக குறைதீர் கூட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 13ம் தேதி பொது வினியோக குறைதீர் கூட்டம், தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் தாலுகாவில் சிங்காடிவாக்கம் கிராமத்திலும், உத்திர மேரூர் தாலுகாவில் மானாம்பதியிலும், வாலாஜாபாத் தாலுகாவில் ஊத்துக்காடு கிராமத்திலும், ஸ்ரீபெரும் புதுார் தாலுகாவில் காட்ராம்பாக்கத்திலும்
குன்றத்துார் தாலுகாவில் வளையக்கரணை கிராமத்திலும் இக்குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
இங்கு, ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்வது, பெயர் நீக்கம், சேர்த்தல், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை இங்கு பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

