/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதிமீறி இயக்கப்படும் மினி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
/
விதிமீறி இயக்கப்படும் மினி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
விதிமீறி இயக்கப்படும் மினி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
விதிமீறி இயக்கப்படும் மினி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
ADDED : நவ 18, 2025 04:18 AM

காஞ்சிபுரம்: பிள்ளைச்சத்திரம் - சுங்குவார்சத்திரம் வரையிலான வழித்தடத்தில், விதிமீறி மினி பஸ் இயக்கப்படுவதாக, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு நேற்று அளித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் , பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 389 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட, கலெக்டர் கலைச்செல்வி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும், இரு பெண்களுக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விபத்தில் உயிரிழந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும், ஈமச்சடங்கிற்கான செலவினம் மற்றும் இயற்கை மரணமடைந்த 12 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டன.
மேலும், ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றும், 12 மாற்றுத்திறனாளி மாணவ- - மாணவியருக்கு 31,000 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன
இக்கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை, மினி பஸ் சேவை பாதிப்பதாக, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: ஆட்டோ ஓட்டுநர் களான நாங்கள், 50 பேரும், சுங்குவார்சத்திரம் - பிள்ளைச்சத்திரம் இடையே ஷேர் ஆட்டோக்களை இயக்கி வருகிறோம்.
இந்த வழித்தடத்தில், ஏற்கனவே பல பேருந்துகள் இயங்கும் நிலையில், மினி பஸ் சேவைக்கு தனியார் பே ருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிள்ளைச்சத்திரம் வழியாக கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மினி பஸ், சுங்குவார்சத்திரம் வரை தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் பா திக்கின்றனர்.
சுங்குவார்சத்திரம் செல்ல அனுமதி இல்லாத மினி பஸ்கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

