sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளரை கைது செய்யுங்கள் போலீசாரிடம் அமைச்சர் காட்டம்

/

கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளரை கைது செய்யுங்கள் போலீசாரிடம் அமைச்சர் காட்டம்

கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளரை கைது செய்யுங்கள் போலீசாரிடம் அமைச்சர் காட்டம்

கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளரை கைது செய்யுங்கள் போலீசாரிடம் அமைச்சர் காட்டம்


ADDED : ஜன 26, 2024 11:16 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், கழிவுநீர் டேங்கர் லாரிகள், கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள கால்வாய், பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதை கேட்ட அமைச்சர் அன்பரசன், மாங்காடு காவல் நிலைய ஆய்வாளரை அழைத்து விளக்கம் கேட்டார்.

பின் 'கழிவுநீர் கொட்டும் லாரியின் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவருக்கு உத்தரவிட்டார்.

மேலும், 'இந்த விஷயத்தில் போலீசார்நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கழிவுநீர் லாரிகளுக்கு போலீசார் சிலரே உடந்தையாக உள்ளனர் என, நானே மேலிடத்தில் புகார் அளிப்பேன்' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், 'கழிவுநீர் லாரி உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்துங்கள்; நானும் பங்கேற்கிறேன். கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்ற வேண்டும்.

வேறு இடத்தில் ஊற்றினால், லாரியை பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்வோம் என அறிவியுங்கள்' என, அமைச்சர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் சிறுமி ஒருவர் குடியிருப்பில் பாம்பு வருவதாக புகார் தெரிவித்தார். பணம் கொடுக்கவில்லை என்றால் துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை உள்ளிட்ட புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர் 'நீங்கள் நல்ல அமைச்சர்; ஆனால் நீங்கள் சொல்வதை செய்ய இங்கு ஆட்கள் இல்லை' என்றார். இதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது. இந்த கூட்டத்தில், மாவட்ட குழு தலைவர் மனோகரன், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

கீவளூரில் வாக்குவாதம்


ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கீவளூர் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் பழனி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் வரவு - செலவு விபரங்களை வாசித்தார்.

அப்போது குறுக்கிட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

கீவளூர் ஊராட்சியில் வளர்ச்சி பணி என்ற பெயரில் அதிக நிதி செலவிடப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும். அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குப்பை வண்டியில் பயணம்


ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் காட்டரம்பாக்கம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள், துாய்மை பாரத இயக்ககம் மூலம் குப்பை அகற்ற வழங்கப்பட்ட வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.

முத்தியால்பேட்டை


காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில், ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

ஊராட்சிகளுக்கு மத்திய - மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுதவிர, ஊராட்சிகளில் வரியினங்களும் வசூலிக்கப்படுகின்றன. இந்த வரவுக்கு ஏற்ப செலவினங்களை, ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு செலவிட வேண்டும்.

குறிப்பாக, ஊராட்சிகளில் சாலை வசதிகள், தெரு விளக்கு வசதிகள், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என, உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புத்தேரி


காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரியில் ஊராட்சி தலைவர் ஜார்ஜ் தலைமையில் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், புத்தேரி பெரிய மேட்டுத்தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் சீரமைப்பது, மேட்டு நகரில் கூடுதலாக ஆழ்துளை குடிநீர் குழாய் அமைத்தல், புத்தேரி-மேட்டு நகர் இணைப்பு சாலை சீரமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

காலுார்


காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சகுந்தலா சங்கர் தலைமையில் நடந்தது.

இதில், ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் சுடுகாடு மற்றும் இடுகாட்டிற்கு செல்லும் பாதை மோசமாக உள்ளதால், சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வைப்பூர்


குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். குன்றத்துார் துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

அதன்பின், ஒன்றாவது வார்டு மக்கள், தங்களின் வார்டில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.

சாலை வசதி, குடிநீர் குழாய் அமைத்தல், சுடுகாடு அமைத்தல், குளம் மேம்படுத்துதல் போன்ற எந்த ஒரு வேலையும் தங்கள் பகுதியில் செய்துதரவில்லை. தொடர்ந்து 1வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஊராட்சியில் அனைத்து பணிகளுக்கும் முட்டுக்கட்டையாக சில வார்டு உறுப்பினர்கள் செயல்படுவதாகவும், பணிகள் தொடர்பாக எந்த ஒரு தீர்மானத்திற்கும் அவர்கள் ஒப்புதல் அளிக்க மறுக்கின்றனர்.

இதனால், ஊராட்சியில் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தலைவர் சுமதி தெரிவித்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள், முட்டுக்கட்டையாக இருக்கும் வார்டு உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், வார்டு உறுப்பினர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

இதையடுத்து, ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டையாக செயல்படும் 3வது வார்டு உறுப்பினர் ரவிசந்திரம், 4வது வார்டு உறுப்பினர் சம்பூர்ணம், 5வது வார்டு உறுப்பினர் சலசா, 6வது வார்டு உறுப்பினர் வெண்ணிலா ஆகியோரை பணியிடம் நீக்க, பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us