/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கற்றல் கற்பித்தல் வெளிப்படை சவால் மாணவர்களின் திறனை சோதித்த எம்.எல்.ஏ.,
/
கற்றல் கற்பித்தல் வெளிப்படை சவால் மாணவர்களின் திறனை சோதித்த எம்.எல்.ஏ.,
கற்றல் கற்பித்தல் வெளிப்படை சவால் மாணவர்களின் திறனை சோதித்த எம்.எல்.ஏ.,
கற்றல் கற்பித்தல் வெளிப்படை சவால் மாணவர்களின் திறனை சோதித்த எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 16, 2025 09:11 PM
அய்யங்கார்குளம்:அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அடிப்படை திறன்களை 100 நாட்களில் கற்பித்து வெளிப்படை சவாலுக்கு தயாராக வேண்டும். இத்திட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் வாசித்தல், அடிப்படை கணக்கு திறன்களில் வெளிப்படை சவால்களுக்கு சமாளிக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
மாணவர்களின் கற்றல் அடைவை தங்கள் பகுதியின் கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனா, தங்கள் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 293 மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களை சோதிக்க, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி, எம்.எல்.ஏ., சுந்தர், அய்யங்கார்குளம் துவக்கப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், எம்.எல்.ஏ., கேட்ட வினாக்களுக்கு மாணவ - -மாணவியர் சரியான விடை அளித்தனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை எம்.எல்.ஏ., சுந்தர் பாராட்டினார். மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், மற்றும் எழுதுபொருட்கள் பரிசளித்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.