ADDED : நவ 25, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 20வது ஆண்டு சோமவார விழா கடந்த 17ம் தேதி துவங்கியது.
இரண்டாவது சோமவாரமான நேற்று, மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிவராஜபதி ஓதுவார் மற்றும் குழுவினரின், திருமுறை இன்னிசை நடந்தது.
விழாவிற்கான ஏற்பாட்டை நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

