/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சிவன் கோவில்களில் சோமவார பிரதோஷ வழிபாடு
/
காஞ்சி சிவன் கோவில்களில் சோமவார பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 28, 2025 12:13 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் உள்ள அக்னீஸ்வரருக்கு, தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷமான நேற்று மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை, வீரஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கிளார் அகத்தீஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, காந்தி சாலை வன்னீஸ்வரர், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர், டி.கே.நம்பி தெரு மணிகண்டீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும், நேற்று சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.