/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
/
டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
ADDED : ஜன 19, 2025 03:07 AM

திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, மத்துார் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எண்: 8710 இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விற்பனை முடிந்த பின், கடையை பூட்டி, பணத்தை லாக்கரில் வைத்துவிட்டு மேற்பார்வையாளர் அய்யப்பன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு, கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் பக்கவாட்டு சுவற்றில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு இருந்ததையும் கண்டார்.
ஷட்டரை திறக்க முடியாததால், கடப்பாரையால் சுவரில் ஓட்டை போட்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த சில்லரை நாணயங்கள், 5,000 ரூபாய், 10 மதுபாட்டில்கள் காணவில்லை.
முதல் நாள் விற்பனை செய்த 2.20 லட்சம் ரூபாயை கடை லாக்கரில் வைத்து பூட்டப்பட்டிருந்தது. லாக்கரை மர்ம நபர்கள் திறக்க முடியாததால், கல்லாவில் இருந்த சில்லரை பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். ஐந்து பீர்பாட்டில்களை குடித்து காலி செய்து, கடையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அய்யப்பன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

