/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் குரங்குகளின் தொல்லை
/
ஏகாம்பரநாதர் கோவிலில் குரங்குகளின் தொல்லை
ADDED : பிப் 19, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் ;\ காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறாக, குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக, கோவிலில் அர்ச்சனைக்கு தேங்காய், பழம் வாங்கி செல்வோரிடம், குரங்குகள் தொல்லையில் ஈடுபடுகின்றன. இதுபோன்ற நேரங்களில், பக்தர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட வனத் துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

