/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதவப்பாக்கத்தில் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
/
ஆதவப்பாக்கத்தில் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
ஆதவப்பாக்கத்தில் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
ஆதவப்பாக்கத்தில் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
ADDED : ஆக 11, 2025 12:45 AM

உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, ஆதவப்பாக்கத்தில் மக்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா, ஆதவப்பாக்கம் மற்றும் வெங்கச்சேரி ஆகிய கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் தோட்டத்தில் காய், கனி தரக்கூடிய மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் குரங்குகள் கூட்டமாக சுற்றிக் கொண்டு, காய் மற்றும் கனி தரும் மரங்களை சேதப்படுத்தியும், மக்களை அச்சுறுத்தியும் வந்தன.
இது குறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஆதவப்பாக்கம் மற்றும் வெங்கச்சேரி ஆகிய கிராமங்களில், உத்திரமேரூர் வனத்துறையின் சார்பில், வனச்சரக அலுவலர் ராமதாஸ் தலைமையில், மூன்று இடங்களில் நேற்று கூண்டு வைக்கப்பட்டது.
அதில், 27 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டன. பின், வனத்துறையினர் குரங்குகளை மருதம் காப்புக்காட்டில் விட்டனர்.

