/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்
/
பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 28, 2025 01:21 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், வடகிழக்கு பருவமழை குறித்த, முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 'ஆப்த மித்ரா' தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தாசில்தார் சுந்தர் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன்முன்னிலை வகித்தார்.
அதில், முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 'ஆப்த மித்ரா' திட்டத்தின் கீழ் செயல்படும் தன்னார்வலர்களுக்கு மழை, வெள்ளம், இடி, மின்னல் ஆகிய பேரிடர் காலங்களில் உடனடியாக சென்று, பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் எதிரே, தீ விபத்து ஏற்படும் நேரங்களில், அதை தடுக்கும் முறைகள் குறித்து, தீயணைப்பு துறையின் மூலமாக தன்னார்வலர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.