/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

ADDED : செப் 22, 2024 02:24 AM

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செல்லும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நீர்வள ஆதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை கால்வாய், தும்பவனம் கால்வாய், மஞ்சள் நீர் கால்வாய்களில், செடி, கொடிகள், பிளாஸ்டிக் குவியல்கள் புதர்போல மண்டியிருந்தது.
காஞ்சிபுரம் கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள இரட்டை கால்வாய், தும்வனம் கால்வாய், மஞ்சள்நீர் கால்வாய் துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இதில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் கால்வாய் துார்வாரும் பணி முழுமை பெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.