/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செவிலிமேடில் நீர்வழித்தடம் சீரமைப்பு
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செவிலிமேடில் நீர்வழித்தடம் சீரமைப்பு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செவிலிமேடில் நீர்வழித்தடம் சீரமைப்பு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செவிலிமேடில் நீர்வழித்தடம் சீரமைப்பு
ADDED : ஆக 15, 2025 11:42 PM

காஞ்சிபுரம்:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவிலிமேடு பாலாறு உயர்மட்ட பாலத்தின் கீழ் நீர்வழித்தடம் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடிற்கும், புஞ்சையரந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே, பாலாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
இப்பாலத்தின் கீழ் நீர்வழித்தடம் பகுதியில், கருவேலம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் காடு போல வளர்ந்துள்ளன. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், செவிலிமேடு பாலத்தின் கீழ் உள்ள நீர்வழித்தடத்தின் வழியாக வெள்ளநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தின் கீழ் நீர்வழித்தட பாதை சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு மற்றும் கட்டுமான பிரிவு அதிகாரி கூறியதாவது:
தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தின் கீழ், நீர்வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேலம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக வேருடன் அகற்றப்பட்டுள்ளன.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வெள்ளநீர் தடையின்றி செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.