/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் வேண்டாம் 14வது முறையாக தீர்மானம்
/
பரந்துார் ஏர்போர்ட் வேண்டாம் 14வது முறையாக தீர்மானம்
பரந்துார் ஏர்போர்ட் வேண்டாம் 14வது முறையாக தீர்மானம்
பரந்துார் ஏர்போர்ட் வேண்டாம் 14வது முறையாக தீர்மானம்
ADDED : ஆக 15, 2025 11:54 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று நடந்த கிராம சபை கூட்டங்களில், கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பரந்துார் விமானம் நிலையம் வேண்டாம் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் அருகே கீழம்பி ஊராட்சியில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சியின் செயல் திட்டங்கள் பற்றிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று காலை நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
இதில், பரந்துார் விமான நிலையம் வேண்டாம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாலாஜாபாத் ஒன்றிய அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
பழையசீவரத்தில், ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில், பழையசீவரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஏற்படுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்ட்டது.
ஊத்துக்காடு ஊராட்சியில், தலைவர் சாவித்திரி தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேண்பாக்கத்தில், ஊராட்சி தலைவர் சரளா தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமதுரப்பாக்கம் கிராமத்தில் சமுதாயக்கூடம் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நத்தாநல்லுாரில் ஊராட்சியில், தலைவர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சுமதி தலைமையில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் வைப்பூரில் சிமென்ட் கால்வாய், புதிய ஆழ்துளை கிணறு அமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* தினமலர் செய்தி எதிரொலி
உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை ஊராட்சியில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், ஊராட்சி தலைவர் பிருந்தாவதி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சியில் மயான பாதையில் சிறுபாலம், கூடுதல் நெற்களம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உத்திரமேரூர், சாலவாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. ஊராட்சி தலைவர் சத்யா தலைமை தாங்கினார்.