/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
/
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
ADDED : நவ 10, 2024 12:40 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த மாதம் முதல், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியிலும், துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்களிலும் தேங்கிய மழைநீரால் காஞ்சிபுரம் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், நகரவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதார பிரிவினர், வார்டு வாரியாக கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துவக்கியுள்ளனர். சுழற்சி முறையில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து புகை அடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.