/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
18 வார்டுகளுக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு அதுவும் பழுதானதால் கொசுக்களுக்கு குஷி

ADDED : ஜூலை 04, 2025 01:25 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், கொசுக்களை ஒழிக்க, புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. தற்போது, அதுவும் பழுதாகிவிட்டது.
இப் பேரூராட்சியில் 18 வார்டுகளில், 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிப்பது வழக்கம். ஆனால், புகை மருந்து அடிக்கும் இயந்திரம், ஒன்று மட்டுமே உள்ளது; ஒரு மாதமாக அதுவும் பழுதாகி உள்ளது.
அவசர தேவைக்கு, மருந்து அடிக்க முற்படும்போது, இயந்திரம் அரை மணி நேரத்திற்குள் சூடாகி விடுகிறது.
எனவே, பேரூராட்சிக்கு கூடுதலாக புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், ''இந்த இயந்திரத்தை பழுது பார்த்தும் சரியாக இயங்கவில்லை. இதனால், இதற்கு பதிலாக இரண்டு புதிய இயந்திரங்கள் வாங்க உள்ளோம்,'' என்றார்.