/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாக்கடையாக மாறிய மழைநீர் கால்வாய் மலையாங்குளத்தில் கொசு தொல்லை
/
சாக்கடையாக மாறிய மழைநீர் கால்வாய் மலையாங்குளத்தில் கொசு தொல்லை
சாக்கடையாக மாறிய மழைநீர் கால்வாய் மலையாங்குளத்தில் கொசு தொல்லை
சாக்கடையாக மாறிய மழைநீர் கால்வாய் மலையாங்குளத்தில் கொசு தொல்லை
ADDED : ஏப் 25, 2025 01:22 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சியில், காட்டுகொல்லை, நரியம்புதுார், ஆதிதிராவிடர் காலனி, நரியம்பாக்கம், அம்பேத்கர் நகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் ஆகியவை வெளியேற, மழைநீர் வடிகால்வாய் இல்லாமல் இருந்தது.
இதனால், வீட்டு கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களிலே தேங்கி வந்தது. இதை தவிர்க்க, அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, பெருமாள் கோவில் தெருவில் உள்ள, மழைநீர் வடிகால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல், மண்ணால் தூர்ந்த நிலையில் உள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிந்து செல்லாமல், கால்வாயிலே தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது.
இந்த பகுதியில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, கிராமமக்கள் தொல்லைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாக்கடையாக மாறிய மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

