/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
/
சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
ADDED : மார் 09, 2024 12:25 AM
சென்னை:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, கணவரை பிரிந்து, மூன்று ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார்.
பூந்தமல்லியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான அருண்குமார் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பட்டாபிராமில் இருவரும் தனியாக இருந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையூறாக சிறுவன் இருந்ததால், போதையில் இருந்த அருண்குமார், சிறுவனை கீழே தள்ளி கழுத்தில் மிதித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
பட்டாபிராம் போலீசார், அருண்குமாரை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

