/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் பாதியை காணோம் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
/
சாலையில் பாதியை காணோம் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
சாலையில் பாதியை காணோம் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
சாலையில் பாதியை காணோம் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2025 07:58 PM

காரை:வாலாஜாபாத் ஒன்றியம் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், ஏனாத்துாரில் இருந்து காரை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக காரை கிராமத்தினர் மட்டுமின்றி வேடல், சிறுவாக்கம், பரந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையால், சாலையில் 30 மீட்டருக்கு மேல் மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமான சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் இருவர் தவறி விழுந்ததில் கால்களில் முறிவு ஏற்பட்டதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இச்சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.