/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 13, 2025 01:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, புக்கத்துறை சாலை, எல்.எண்டத்துார் சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், இரு சக்கர வாகனங்களில் உத்திரமேரூருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த பிரதான சாலைகளில் தெரு நாய்கள் எப்போதும் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, தெருநாய்கள் குரைத்துக்கொண்டே துரத்துகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, சாலைகளில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர்களை தெரு நாய்கள் அடிக்கடி கடித்து வருகின்றன.
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, உத்திரமேரூரில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.