/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மார் 31, 2025 01:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் சாலவாக்கம் சாலை, வெங்கச்சேரி சாலை, பழைய சீவரம் சாலை ஆகிய பிரதான சாலைகள் செல்கின்றன.
இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்தில் செல்லும் சாலைகளில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும், குரைத்தவாறு துரத்திச் சென்று அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்திவரும் நாய்களை பிடிக்க, துறை அதிகாரிகளுக்கு, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.