/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆபத்தான அயிமிச்சேரி சாலை வளைவு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
ஆபத்தான அயிமிச்சேரி சாலை வளைவு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆபத்தான அயிமிச்சேரி சாலை வளைவு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆபத்தான அயிமிச்சேரி சாலை வளைவு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 03, 2025 12:46 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், அயிமிச்சேரி கிராமத்தில் இருந்து, நாவிட்டான்குளம் செல்லும் சாலை உள்ளது. நாவிட்டான்குளம், கோளவேடு, திருவங்கரணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இச்சாலை வழியை பயன்படுத்தி, அயிமிச்சேரி பிரதான சாலைக்கு வந்து அங்கிருந்து, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலையில், அயிமிச்சேரி விவசாய நிலங்களையொட்டிய பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த ஆபத்தான சாலை வளைவின் ஒருபுறத்தை ஒட்டியுள்ள தனியராது நிலத்தில், 10 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
எனவே, அயிமிச்சேரி சாலையில் உள்ள ஆபத்தான வளைவில், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி உள்ளனர்.