/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வதியூரில் தடுப்பின்றி தரைப்பாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
வதியூரில் தடுப்பின்றி தரைப்பாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வதியூரில் தடுப்பின்றி தரைப்பாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வதியூரில் தடுப்பின்றி தரைப்பாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 21, 2024 01:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, முட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை நடுவே, கம்பன் கால்வாய் கடந்து செல்கிறது.
இந்த சாலை குறுக்கே, ஐந்து அடி தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு வசதி இல்லை.
இதுதவிர, மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அளவுக்கு அதிகமாக தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் போது, பாலத்திற்கும், கால்வாய்க்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு உள்ளது.
இதனால், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கீழ்வேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், வடகிழக்கு மழை காலத்தில், கால்வாய் பாலத்தின் வழியாக செல்லும் போது, நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளனர்.
ஆகையால், முட்டவாக்கம் -ஒழுக்கோல்பட்டு இடையே செல்லும் கம்பன் கால்வாய் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.