/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 11, 2024 10:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், கடந்த வாரம், நிலத்தடியில் புதைக்கப்பட்டு இருந்த மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், பள்ளம் தோண்டப்பட்டு குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டது.
இருப்பினும், குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டிய இடத்தில், தார் ஊற்றி சாலையை முறையாக சீரமைக்காமல், தற்காலிகமாக மண் கொட்டபட்டு அந்த இடத்தில், சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் மையப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், சாலை அகலம் குறுகிவிட்டது. இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டிய இடத்தை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை தடுப்பை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.