/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிட்டியம்பாக்கம் சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சிட்டியம்பாக்கம் சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிட்டியம்பாக்கம் சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிட்டியம்பாக்கம் சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 29, 2025 12:41 AM
காஞ்சிபுரம்:சிட்டியம்பாக்கத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் கிராமப்புற சாலை உள்ளது. சுற்றுவட்டாரத்தினர், சிட்டியம்பாக்கம் - ஏனாத்துார் - கோனேரிகுப்பம் வழியாக காஞ்சிபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து ராஜகுளம், சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்வோர் ஏனாத்துார் வழியாக சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.
இச்சாலை, கடந்த ஆண்டு கனரக வாகனங்கள் சென்றதால், சாலை சேதம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. இதை தற்காலிகமாக, கட் டடக் கழிவுகளை கொட்டி ஒன்றிய நிர்வாகத்தினர் சீரமைத்தனர். நிரந்தரமாக சாலை போடவில்லை.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சாராகும் சூழல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க ஏனாத்துார் - சிட்டியம்பாக்கம் சாலையை, சீரைமக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.