/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்
/
குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : மே 01, 2025 12:59 AM

அரும்புலியூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில், அருங்குன்றம் அருகே பிரிந்து அரும்புலியூர் வழியாக கரும்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.
அரும்புலியூர், சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியை பயன்படுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், அரும்புலியூர் துவங்கி, கரும்பாக்கம் வரையிலான 2 கி.மீ., சாலை குறுகியதாக இருந்து வருகிறது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களை எளிதாக கடந்து செல்ல முடியமால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபடுகின்றனர்.
அரும்புலியூர்- கரும்பாக்கம் இடையிலான இச்சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது.
விவசாயம் சார்ந்த பணிகளுக்கு டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்கள் அவ்வப்போது இயக்கப்படுகின்றன.
குறுகிய இந்த சாலையில், நெல் அறுவடை போன்ற வாகங்களை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது.
எனவே, இச்சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.