/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சிறுபாலத்தால் அச்சம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சேதமடைந்த சிறுபாலத்தால் அச்சம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த சிறுபாலத்தால் அச்சம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த சிறுபாலத்தால் அச்சம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 09, 2024 01:17 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் இருந்து பிரிந்து, பிள்ளைப்பாக்கம் செல்லும் சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பிள்ளைப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் வழியாக, பிள்ளபை்பாக்கம், கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு, வளத்தாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமவாசிகள் கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுபாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உடைந்துள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சிறுபாலத்தை கடக்கும் போது, நிலை தடுமாறி கால்வாயில் விழும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து- செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் குறுக்கே, சேமடைந்துள்ள சிறுபாலத்தின் தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.