/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பாலத்தில் மண் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
திருமுக்கூடல் பாலத்தில் மண் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருமுக்கூடல் பாலத்தில் மண் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருமுக்கூடல் பாலத்தில் மண் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 05, 2025 12:11 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அருங்குன்றம், மதூர், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, வெடி வைத்து தகர்க்கப்படும் பாறைகளை, சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் கிரஷர்களில் கற்களாகவும், எம் - சாண்ட் மணலாகவும் உடைக்கப்பட்டு வருகிறது.
இதை, லாரிகள் வாயிலாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு, திருமுக்கூடல் பாலத்தின் வழியே கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு எம் - சாண்ட், ஜல்லிகள், மண் ஆகியவை கொண்டு செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால் மண் சிதறி, குவியலாக சேர்ந்து உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, மண் குவியலில் சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, திருமுக்கூடல் பாலத்தில் உள்ள மண் குவியலை அகற்ற தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, திருமுக்கூடல் பாலத்தில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.