/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மழைநீர் வடிகால் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 26, 2024 11:43 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது, ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் பகுதியில், நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகல்வாய் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது.
இதனால், சென்னையில் இருந்து வேலுார் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

