/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 18, 2025 01:46 AM

புத்தேரி:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் - முசரவாக்கம் சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் - முசரவாக்கம் சாலை வழியாக புத்தேரி, பாக்குபேட்டை, மேட்டு நகர், சிறுகாவேரிபாக்கம், கீழம்பி, முசரவாக்கம், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெருவில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறு பாலம் உள்ளது.
சாலையோர வளைவில் உள்ள இப்பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததால், வெள்ளைகுளம் தெருவில் இருந்து, புத்தேரிக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி, சிறுபாலத்தின் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வெள்ளைகுளம் தெருவில் சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.