/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 04, 2024 12:28 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன
இந்த நெடுஞ்சாலையில், இப்பகுதியில் மப்பேடு, உளுந்தை, கீழச்சேரி, கொண்டஞ்சேரி மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட வளர்புரம், மண்ணுார், மேவளூர குப்பம் உட்பட பல கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன.
இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் பலியாகும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.