/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : மே 17, 2025 01:26 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் உள்ள செரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி, காரணித்தாங்கல், பனப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள், தங்களின் மாடுகளை கொட்டகையில் வைத்து பரமரிப்பது இல்லை.
மேய்சலுக்கு செல்லும் மாடுகள், இரவு நேரங்களில் நெடுஞ்சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை பிடித்து ‛கோ - சாலை' யில் அடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.