/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராஜம்பேட்டையில் குறுகிய சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
ராஜம்பேட்டையில் குறுகிய சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ராஜம்பேட்டையில் குறுகிய சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ராஜம்பேட்டையில் குறுகிய சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 14, 2025 05:50 AM

உத்திரமேரூர்: ராஜம்பேட்டை, களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறுகிய சாலைகளாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
கரும்பாக்கம் - மெய்யூர் சாலையில், ராஜம்பேட்டையில் இருந்து களியப்பேட்டை வழியாக ஒரக்காட்டுப்பேட்டை செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியை பயன்படுத்தி கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, அரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு இச்சாலை வழியாக வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், இக்கிராமப்புறங்கள் விவசாயம் நிறைந்த பகுதிகளாக உள்ளதால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கான டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களும் அவ்வப்போது சென்று வருகின்றன.
இந்நிலையில், இச்சாலையில், ராஜம்பேட்டை துவங்கி, களியப்பேட்டை வரையிலான சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று வழிவிட இயலாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
எனவே, ராஜம்பேட்டை சாலையை அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

