/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் இடையூறு
/
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் இடையூறு
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் இடையூறு
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் இடையூறு
ADDED : டிச 14, 2025 05:49 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட, திருமங்கையாழ்வார் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் சாலை, தேரடி சாலை உள்ளிட்டவை முக்கிய சாலைகளாக உள்ளன.
குறிப்பாக, திருவள்ளூர் சாலை மற்றும் தேரடி சாலைகளை இணைக்கும் திருமங்கையாழ்வார் சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வழக்கமாக போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில், வாகன நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இந்த சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கிருந்து வெளியேறும் கட்டட கழிவுகள், திருமங்கையாழ்வார் சாலையின் இரண்டு பக்கங்களிலும் கொட்டப்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, வழக்கத்தை விட வாகன நெரிசல் அதிகரித்து உள்ளது.
எனவே, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள, கட்டட கழிவுகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

