/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூடப்படாத மழைநீர் வடிகால்வாய் மூடி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : டிச 16, 2025 06:03 AM

ஓரிக்கை: காஞ்சிபுரம் ஓரிக்கை யில், மழைநீர் வடிகால் வாய் மூடியை மூட வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வழியாக குருவிமலை, களக்காட்டூர், மாகரல், ஆற்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்கு வரத்து நிறைந்த இச்சாலை யோரம், சாலை மட்டத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஓரிக்கை நான்கு முனை சந்திப்பு அருகில், கால்வாயின் மீது மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் முறையாக மூடப்படாமல் உள்ளது.
இதனால், சாலை யோரம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கால்நடைகள், மூடப்படாமல் உள்ள கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, விபத்து ஏற்படு வதை தவிர்க்க திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயின் மீது மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப்பை முறையாக மூட வேண்டும் என, பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.