/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்
ADDED : டிச 16, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மாரியம்மன் கோவில் தெரு அருகில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ஏ.கேசவன், காஞ்சிபுரம்.

