/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 06, 2025 05:39 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சி புரம் தாலுகா அலுவலகம் நுழைவாயில் சாலை வளைவு பகுதியில், கால்வாயில் சென்ற மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், தாலுகா அலுவலக சாலை வளைவில் திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரி களும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் காமராஜர் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.