/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
/
குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ADDED : டிச 06, 2025 05:40 AM

காஞ்சிபுரம்: நீர் வரத்து கால்வாய்யோரம் கரை இல்லாததால், ஏரி உபரி நீர் ஊவேரி குடியிருப்புகளில் புகும் அபாயம் உள்ளது என, குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால், உபரி நீர் ஊவேரி, வேளியூர் ஆகிய இரு ஏரிகள் நிரம்பும். இந்த ஏரி நீர் வரத்துக் கால்வாய் கரை சரியில்லாததால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, வயல் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, கோவிந்தவாடி ஏரி நிரம்பினால், ஊவேரி கிராமம் வழியாக வேளியூர் ஏரிக்கு செல்லும் நீர் வரத்துக் கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது.
இந்த கால்வாய் கரையோரம் தடுப்பு இல்லாததால், ஊவேரி காலனி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, அப்பகுதி முழுதும் சகதியாக மாறி உள்ளது.
இதனால், அப்பகுதியில் தண்ணீர் வடிந்த பின் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என, குடியிருப்பு மக்கள் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கான்கிரீட் கால்வாய் கரை கட்டிக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

