/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கும்பாபிஷேகத்திற்கு 'சிறப்பு பாஸ்' பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

ADDED : டிச 06, 2025 05:41 AM

காஞ்சிபுரம்: 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப்பின், நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்களுக்கு அறி விப்பு பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.