/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர்மட்ட பாலத்தில் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
உயர்மட்ட பாலத்தில் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
உயர்மட்ட பாலத்தில் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
உயர்மட்ட பாலத்தில் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 28, 2024 01:07 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், ஓரிக்கையில் பாலாறு குறுக்கிடும் இடத்தில் உயர்மட்டம் பாலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, வேடந்தாங்கல், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் ஓரிக்கை பாலாறு உயர்மட்ட பாலம் வழியாக சென்று வருகின்றன.
ஓரிக்கை உயர்மட்டபாலம் வழியாக 'எம்.சாண்ட்' மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து சிதறிய மணல், மேம்பாலத்தின் சாலையின் இரு ஓரங்களிலும் குவியலாக உள்ளது.
இதனால், உயர்மட்ட பாலத்தின் சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, மணல் குவியலால் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஓரிக்கை பாலாறு உயர்மட்ட பாலத்தில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.