/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை நடுவே அறுந்து விழுந்த மின் கம்பி ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

ADDED : ஜூலை 18, 2025 01:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், ஒரகடத்தில், திடீரென சாலையில் நடுவே அறுந்து விழுந்த மின் கம்பியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஒரகடம் அருகே, நல்லத்தண்ணி குளம் சந்திப்பில் இருந்து, சென்னக்குப்பம் ஊராட்சி அலுவலகம், அரசு துவக்கப் பள்ளி, ஒரகடம் மின் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரகடத்தில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை கடந்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பி, நேற்று காலை திடீரென அறுந்து விழுந்தது.
சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் மின் கம்பி மீது சென்றனர். இதையடுத்து, அவ்வழியாக வந்தவர்கள், வாகனங்களை தடுத்து நிறுத்தி, இது குறித்து ஒரகடம் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றினர்.