/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
கான்கிரீட் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 03, 2025 01:33 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில், தாசப்ப சுபேதர் தெருவில், கான்கிரீட் பெயர்ந்து, மிகவும் குண்டும், குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் தாசப்ப சுபேதர் தெரு உள்ளது. இத்தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த தெருவிற்கான கான்கிரீட் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இத்தெரு வழியாக பேருந்து நிலையம் மற்றும் வாலாஜாபாத் பிரதான சாலைக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபடுகின்றனர்.
மழைக்காலங்களில் தெருவின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், சறுக்கல் ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இந்த தெருவை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை அடுத்தகட்ட பணிகள் துவங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, தாசப்ப சுபேதர் தெருவை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

