/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மலையாங்குளம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
மலையாங்குளம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜன 10, 2025 02:19 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்மருதம் கிராமத்தில் இருந்து காப்புக்காடு வழியாக மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது.
கடந்தாண்டு, இந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதில், காப்புக்காடு பகுதியில் சாலையின் இருபுறமும் மண் கொட்டாமல் விட்டதால், சாலையோரத்தில் சேதம் ஏற்பட்டு, ஜல்லிகள் சரிந்து காணப்படுகின்றன.
மேலும், சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை பதாகை வைக்காமலும், மின்விளக்கு வசதி இல்லாமலும் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியேசெல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, மருதம் -- மலையாங்குளம் சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

