/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி
/
சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 18, 2024 03:01 AM

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, சுடுகாடு செல்லும் சாலை வழியாக, காரை கிராமத்திற்கு செல்லும் மண் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, ஈஞ்சம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காரை கிராமத்திற்கு மண் பாதையை பயன்படுத்தி, பல்வேறு தேவைக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை குறுக்கே, ஏரி நீர் பாசன கால்வாய் செல்கிறது. இங்கு, சிமென்ட் பைப் போட்டு தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வயலில் விழும் அபாயம் உள்ளது.
எனவே, ஈஞ்சம்பாக்கம் - -காரை கிராமத்திற்கு செல்லும் மண் சாலை குறுக்கே, சிறிய அளவில் கான்கிரீட் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

