/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் சாலையில் விழுந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
உத்திரமேரூர் சாலையில் விழுந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி
உத்திரமேரூர் சாலையில் விழுந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி
உத்திரமேரூர் சாலையில் விழுந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 06, 2025 05:45 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், புளிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், இருபுறமும் உள்ள மரங்கள் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள காந்திநகர் அருகே புளிய மரம் வேரோடு சாய்ந்து நேற்று மதியம் சாலையில் விழுந்தது.
இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரங்கள் வாயிலாக, சாலையில் விழுந்த மரத்தை அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்புறப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகே, போக்குவரத்து சீரானது.
நீண்ட துாரம் வாகனங்கள் காத்திருந்ததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.