/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை நடுவே 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலை நடுவே 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலை நடுவே 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலை நடுவே 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 17, 2024 10:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏனாத்துாரில் இருந்து, தாமல்வார் தெரு வழியாக காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலை 5.60 கி.மீ., நீளம் உடையது.
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக, காஞ்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றிக்கொண்டு, காஞ்சி நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ஏனாத்துார் புறவழிச்சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
வாகன போக்குரவத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், இந்தியன் வங்கி கிளை அருகே, சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.