/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சேதமான சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமான சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமான சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 29, 2025 12:00 AM

காஞ்சிபுரம், ஜூன் 29-
காஞ்சிபுரம் அடுத்த, முசரவாக்கத்தில் இருந்து, திருப்புட்குழி செல்லும் சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில் தடுப்பு அமைப்பதோடு சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தடுப்பு இல்லை
முசரவாக்கத்தில் இருந்து, திருப்புட்குழி மதுரா, பாலுசெட்டிசத்திரம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, கிளார், சங்கரன்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு பள்ளி செல்லும் மாணவ --- மாணவியர், பணிக்கு செல்வோர் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில், விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. பள்ளம் உள்ள பகுதியில் தடுப்பு இல்லாததால், நான்கு நாட்களுக்கு முன் இவ்வழியாக சென்ற லாரி ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
அச்சம்
இதில், எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால், பள்ளம் உள்ள பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, முசரவாக்கத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், பள்ளம் உள்ள பகுதியில் தடுப்பு அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.