/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லிங்காபுரம் குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
/
லிங்காபுரம் குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
லிங்காபுரம் குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
லிங்காபுரம் குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : டிச 08, 2024 02:06 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்து சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து சங்கராபுரம், லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக. தேவரியம்பாக்கம் சென்றடையும் இணைப்பு சாலை உள்ளது.
சங்கராபுரம் சுற்றுவட்டார கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், லிங்காபுரம், சங்கராபுரம் கிராமங்களில் இயங்கும் தனியார் கல் குவாரிகளில் இருந்து, இச்சாலை வழியாக இரவு, பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன
இச்சாலையில், லிங்காபுரத்தில் இருந்து, 2 கி.மீ., தூரம் கொண்ட சாலை மிகவும் குறுகியதாகவும், சில இடங்களில் சேதமடைந்தும் உள்ளது.
மேலும், சிதிலமடைந்த சாலை பகுதியில், 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 10 அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. பள்ளமான பகுதியின் ஒருபுறம் மட்டும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, மற்றொரு புறம் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால், இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, குறுகிய சாலை பகுதியை அகலப்படுத்துவதோடு, பள்ளமான சாலையோரம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.