/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிங்கிலிபாடி ஏரியோரம் தடுப்பு அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சிங்கிலிபாடி ஏரியோரம் தடுப்பு அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சிங்கிலிபாடி ஏரியோரம் தடுப்பு அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சிங்கிலிபாடி ஏரியோரம் தடுப்பு அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2025 12:18 AM

காஞ்சிபுரம்: சிங்கிலிபாடி ஏரியோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் நீர் வழித்தடம் துவங்குகிறது.
அங்கிருந்து, காஞ்சி புரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கம்பன் கால்வாயில் தண்ணீர் இரு கரைபுரண்டு ஓடும் போது, சிங்கிலிபாடி ஏரி நிரம்பும். கலங்கல் வழியாக மற்றொரு நீர் நிலையும் நிரம்புகிறது.
சிங்கிலிபாடி மேம்பாலம் வழியாக சிங்கிலிபாடி கிராமத்திற்கு சாலையோரம் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளின் ஓரம் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, சிங்கிலிபாடி ஏரியோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேம்பாலத்தின் ஓரம் தடுப்பு ஏற்படுத்தும் போது, நிதிக்கு ஏற்ப கூடுதலாக அமைக்க முடிகிறதா என பார்ப்போம்' என்றார்.

