/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சேதமான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 11:48 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில், பாதாள சாக்கடை இணைப்புக்காக சேதமான சாலையை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், தனியார் பட்டு ஜவுளி கடைகள், உணவகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
காந்தி சாலையில் இருந்து வள்ளல் பச்சையப்பன் தெரு, ஆலடி தெரு, கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெரு, உத்திரமேரூர், வந்தவாசி செல்லும் சாலைக்கு செல்வோர் மேட்டுத் தெரு வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுத் தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில், பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமான சாலையை முறையாக சீரமைக்கவில்லை.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமான பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில் அதிகளவு விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதாள சாக்கடை இணைப்புக்காக சேதமான சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.